இந்தியா

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தியதா அமெரிக்கா?

Staff Writer

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை பயன்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேல் சேர்ந்து நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.

இந்தநிலையில், அமெரிக்காவின் முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மேக்ரிகோரி அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளவாடங்களை ஈரான் தாக்கி அழித்ததால் அமெரிக்க கடற்படை இந்திய துறைமுகங்களை நம்பியிருப்பதாக.” கூறியிருந்தார்.

இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகத்தின் எக்ஸ் தள பக்கத்தில், "போலி செய்தி எச்சரிக்கை! அமெரிக்க கடற்படையால் இந்திய துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட OAN சேனலில் கூறப்படும் கூற்றுகள் போலியானவை, தவறானவை. இதுபோன்ற ஆதாரமற்ற, ஜோடிக்கப்பட்ட கருத்துகளுக்கு உங்களை எச்சரிக்கிறோம்." என்று பதிவிடப்பட்டுள்ளது.