கனிமொழி - ராகுல் காந்தி 
இந்தியா

திமுக- காங். கூட்டணி: ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்திப்பு!

Staff Writer

டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவரான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி இன்று சந்தித்து பேசினார்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தாலும் ’ஆட்சியில் பங்கு’ என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திமுக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் டெல்லியில் இன்று ஜனவரி 28ஆம் தேதி ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கனிமொழி சந்தித்து பேசினார். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இழுபறியான நிலை ஏற்பட்டிருக்கும் சூழலில் ராகுல் காந்தியுடனான கனிமொழியின் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.