பட்டியல் சாதி/பழங்குடியின அதிகாரிகளுக்குத் "தனித் தகுதி" பதவி உயர்வு வழங்கும் கொள்கை செயல்படுத்தப்படாதது ஏன் என்று மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் ஆ. இராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அலுவலக குறிப்பாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மத்திய நேரடி வரிகள் வாரிய அலுவலகத்திலும் அதன் 18 கேடர் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமும், பட்டியல் சாதி/பழங்குடியின அதிகாரிகளுக்குத் தகுதியுடன் கூடிய பணிமூப்பு அடிப்படையில் "தனித் தகுதி" பதவி உயர்வு வழங்கும் கொள்கை செயல்படுத்தப்படவில்லை என பிரச்னை எழுந்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏதேனும் புகார்கள் வந்துள்ளனவா என்றும் துறையில் ’தனித் தகுதி’ பதவி உயர்வுகள் செயல்படுத்தப்படாததால் 10,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் தேங்கிக் கிடக்கின்றன என்றும் அவற்றை குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிரப்ப அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்றும் இராசா அவையில் நேற்று கேள்வி எழுப்பினார்.