பன்னாட்டு நாணய நிதியத்தின் 2026ஆம் ஆண்டுக்கான 190 நாடுகளின் பணவீக்க முன்னறிவிப்புத் தரவுகளின்படி, இந்தியா 4.0 சதவீத பணவீக்க விகிதத்துடன் அதிக பணவீக்கக் குறியீட்டில் 60ஆவது இடத்தில் உள்ளது குறித்து மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததால், இறக்குமதி விலைகள் அதிகரித்ததா? அதன் விளைவாக தங்கம், வெள்ளி மற்றும் பிற இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் உயர்ந்தனவா என்றும் கேட்ட கதிர் ஆனந்த்,
அது குறித்து அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் வினவினார்.