டாமினோஸ் பீட்சா 
இந்தியா

டாமினோஸ் பீசாவின் விற்பனை நிலைய உரிமங்கள் நீக்கம்!

Staff Writer

பிரபல பீட்சா உணவுத் தயாரிப்பு, விற்பனை நிறுவனமான டாமினோஸ் பீட்சாவின் 4 விற்பனை நிலையங்களின் உரிமம் மகாராஷ்டிரத்தில் நீக்கப்பட்டுள்ளது.

டாமினோஸ் பீட்சாவின் விற்பனை நிலையங்களை மகாராஷ்டிரத்தின் உணவு, மருந்து நிர்வாகம் ஆய்வு செய்தபோது பல்வேறு உணவுப் பாதுகாப்பு, சுகாதார விதிமீறல்களைக் கண்டறிந்ததால், 4 விற்பனை நிலையங்களின் உரிமங்களை நீக்க உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கே.எஃப்.சி., பீட்சா ஹட், டேகோ பெல் போன்ற பிரபலமான துரித உணவு விற்பனை நிலையங்களை நிர்வகிக்கும் சேஃபையர் ஃப்ட்ஸ் நிறுவனத்தின் சில விற்பனை நிலைய உரிமங்களையும் நீக்கியுள்ளது.

டாமினோஸ் விற்பனை நிலையங்களில் உணவு சேகரிப்பு, சுத்தமான சூழல், சுகாதாரம், பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், வெப்பநிலைகளைச் சரிசெய்தல், உணவின் தர ஆய்வு, உணவுப் பாதுகாப்பைப் பதிவுசெய்தல் ஆகியவற்றில் குறைபாடுகள்  உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சரியான முறையில் பராமரிக்காதது உட்பட்ட குறைகள் ஆய்வின்போது தெரியவந்தன.

இதைப்போல உணவு விற்பனை நிலையங்களில், இனி தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர உணவுப் பாதுகாப்பு நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram