தமிழிசை செளந்தரராஜன் 
இந்தியா

ஆளுநர் பதவியிலிருந்து விலகினார் தமிழிசை! எந்தத் தொகுதியில் போட்டி?

Staff Writer

தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் துணைநிலை ஆளுநர் பதவிகளிலிருந்து தமிழிசை இன்று காலை பதவிவிலகினார். 

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் தன் விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். 

வரும் நாடாளுமன்ற மக்களவைத்தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் பதவி விலகியுள்ளார். 

தமிழிசை போட்டியிடப்போவது அவரின் பூர்வீக ஊர் அமைந்துள்ள கன்னியாகுமரி தொகுதியிலா அல்லது புதுச்சேரி தொகுதியிலா என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை, தி.மு.க.வின் கனிமொழியிடம் தோல்வியடைந்தார்.

பின்னர், 2019 செப் முதல் தேதியன்று தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2021 பிப்ரவரி 16ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியும் அவருக்குக் கூடுதலாக வழங்கப்பட்டது.