உலக நாடுகளை பாதித்துவரும் எல் நினோ, இந்தியாவில் 15,800 கூடுதல் மரணங்களை நிகழ்த்த வாய்ப்பிருப்பதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்திக் கொள்கை நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கை விவரம்:
"இதுவரை வெப்பநிலை மாற்றத்தால், தாவரங்களில் ஏற்படும் பாதிப்புகளை கணித்த நாங்கள், தற்போது இந்த தீவிர காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இறப்புகளை கணித்துள்ளோம். எல்நினோ பாதிப்பால் உலகளவில் மொத்தம் 4,51,000 இறப்புகள் ஏற்படலாம். அதுவும் பூமியின் கிழக்கு திசையில் இருப்பவர்களுக்கே இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
ஏற்கனவே, 31,400 பேர் நைஜீரியாவில் வாழ்வை இழந்த நிலையில், மேலும் 10,000 இறப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் 19,400 இறப்புகள் ஏற்படலாம். இந்தியாவில் 15,800 இறப்புகளையும், பிரேசிலில் 13,300 இறப்புகளையும் இந்த எல்நினோ நிகழத்த வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதன் தீவிரத்தை உணர்ந்து தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால்தான், வரும்காலங்களில் மேலும் கூடுதல் இறப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த எல்நினோ பாதிப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கும்." என்று உலக வானிலை ஆய்வமைப்பு கூறியுள்ளது.