தேர்தல் ஆணையர்கள் 
இந்தியா

10 மாதங்களில் 14 முறை... தேர்தல் ஆணையர்கள் சொன்ன அதிர்ச்சித் தகவல்!

Staff Writer

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக தங்களுக்குத் தெரியாமல் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசடியாக தேர்தல் நடைபெறுவதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன.

ஆண்டுகளாக நீடித்துவரும் இந்தப் பிரச்னையில் புதிய திருப்பமாக தேர்தல் ஆணைய வட்டாரங்களே ஆணையர்களின் அதிருப்தியை உறுதிப்படுத்தியுள்ளன.

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம், வாக்காளர்கள் நீக்கம், புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் தரவுத் தளப் பராமரிப்பு, மென்பொருள் குறைபாடு ஆகியவை உட்பட பல்வேறு பிரச்னைகளையும் இருவரும் எழுப்பியுள்ளனர்.

இருவரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செயல்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.