ஆனந்த் அம்பானி-ராதிகா மொ்ச்சண்ட் 
இந்தியா

அம்பானி மருகளுக்கு அடித்த யோகம்! வந்து குவிந்த பரிசுகளைக் கேட்டா அசந்துடுவீங்க!

Staff Writer

ஆனந்த் அம்பானி-ராதிகா மொ்ச்சண்ட் திருமணத்தைப் பற்றி பேசாதவர்களே இல்லை என்று சொல்லலாம். காரணம், திருமணத்துக்கான ஏற்பாடுகள் முதல் கலந்து கொண்ட பிரபலங்கள், உணவுப்பட்டியல் வரை எல்லாமே பிரம்மாண்டம்தான்.

கடந்த ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள், புதுமண தம்பதிகளுக்குக் கொடுத்த பரிசுகள் மிகப் பிரமாண்டமாக உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.

கடற்கரை வீடு

முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியினர் தனது மகன் ஆனந்துக்கு சவுதி அரேபியாவில் உள்ள செயற்கை தீவுகளில் ஒன்றான பாம் ஜுமேராவில் 3000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட மாளிகையை வழங்கியுள்ளனர்.

பெண்ட்லி கார்

ஆனந்தின் பெற்றோர் அவருக்கு 5.42 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த காரை பரிசாக வழங்கியுள்ளனர். மேலும், ரூ.21.7 கோடி மதிப்புள்ள கார்டியர் ப்ரூச்( ஆடையில் அணியும் அணி), ரூ. 108 கோடி மதிப்புள்ள முத்து வைரத்தில் செய்யப்பட்ட நெக்லஸையும் வழங்கியுள்ளனர்.

புக்காட்டி கார்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 11.5 கோடி ரூபாய் மதிப்புள்ள புக்காட்டி காரை பரிசாக வழங்கியுள்ளார்.

ஆனந்த் அம்பானி-ராதிகா மொ்ச்சண்ட்

லம்போகினி கார்

அமெரிக்காவைச் சேர்ந்த டபிள்யூ டபிள்யூ பிரபலமான ஜான் சீனா லம்போகினி காரை பரிசளித்துள்ளார்.

ஜெட் விமானம்

பேஸ்புக் சிஐஓ மார்க் ஸுக்கர்பெர்க் தனியார் ஜெட் விமானத்தை பரிசாக வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைர மோதிரம்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ரூ. 9 கோடி மதிப்பில் ஒரு மோதிரம் வழங்கியுள்ளதோடு, ரூ.108 கோடியில் சொகுசு படகு ஒன்றை பரிசளித்ததாகவும் கூறப்படுகின்றன.

அடுக்குமாடி குடியியிருப்பு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ரூ. 40 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பை கொடுத்துள்ளார்.

தங்க செயின்

நடிகை கத்ரீனா கைஃப் விக்கி கவுசல் ஜோடி ரூ. 19 லட்சம் மதிப்பில் தங்க செயின் பரிசளித்துள்ளனர்.

கைத்தறி சால்வை

சித்தார்த் மல்ஹோத்ரா கியாரா அத்வானி தம்பதியினர் ரூ.25 லட்சம் மதிப்பிலான கைத்தறி சால்வை பரிசளித்துள்ளனர்

அதேபோல், அக்‌ஷய் குமார் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்கபேனாவும், சல்மான் கான் ரூ. 15 மதிப்பில் ஸ்போர்ட்ஸ் பைக்கையும், அமிதாப் பச்சன் குடும்பத்தினர் ரூ. 30 கோடியில் நெக்லஸையும். ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி ரூ. 9 கோடியில் பென்ஸ் காரையும், ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி ரூ. 20 கோடி மதிப்பிலா ரோல்ஸ் ராய்ஸ் காரையும் வழங்கியுள்ளனர்.

மேலும், திருமண விழாவில் கலந்து கொண்ட பலர் பெரிய பெரிய சிலைகளையும் ஓவியங்களையும் கொடுத்துள்ளனர். திருமணப் பரிசுகள் என்றால் இப்படி இருக்கணும் என்கிறீர்களா?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram