அப்துல் ஹபீப்பின் பெயர் நீக்கப்பட்டதால் பிறப்புச் சான்றிதழில் சிக்கல் 
இந்தியா

எஸ்.ஐ.ஆரில் தந்தை பெயர் நீக்கம்- குழந்தைக்கு பிறப்புச்சான்று தர மறுப்பு!

Staff Writer

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்போது தந்தையின் பெயர் நீக்கப்பட்டதால், குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

மேற்குவங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் அப்துல் ஹபீப் என்பவர், அவருடைய மனைவி அமீனா காதுனுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி குழந்தை பிறந்தது.

இந்நிலையில், அக்குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் வாங்க உள்ளூர்ப் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ஹபீப் சென்றுள்ளார். அப்போது, அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதைக் காரணம் காட்டி, அவருடைய குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்துல் ஹபீப் கூறுகையில், "என்னுடைய மனைவியின் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. என் பெயர் இடம்பெற்றுள்ள 2002ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் உட்பட்ட ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன. நாங்கள் உள்ளூர் முஸ்லிம் ராஜ்பன்ஷி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அப்பகுதியின் பூர்வீகக் குடியாகிய எங்களை வந்தேறிகள், ஊடுருவல்காரர்கள் எனத் தவறாகச் சுட்டுக்காட்டுவது மிகுந்த வேதனை அளிக்கிறது." என்று தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram