மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் (வயது 90) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரை சேர்ந்த சிவராஜ் பாட்டீல், லத்தூரின் நகராட்சி மன்றத் தலைவராக தனது அரசியல் வாழ்க்கைத் தொடங்கினார். 1972 முதல் 1979 வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பின்னர், மாநில துணை அமைச்சர், சபாநாயகர் என பல்வேறு முக்கிய பொற்றுப்புகளை வகித்த அவர், 1980களில் தேசிய அரசியலில் காலடி எடுத்து வைத்தார். அவர் லத்தூர் மக்களவைத் தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்றார்.
சிவராஜ் பாட்டீல் 2004 முதல் 2008 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும், 1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகராகவும் இருந்தார். பஞ்சாப் ஆளுநர் இருந்த சிவராஜ் பாட்டீல், 2010ஆம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றினார்.
இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச்சடங்குகளுக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என சிவராஜ் பாட்டீல் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
2008இல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து, உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.