எஸ்.ஐ.ஆர். 
இந்தியா

3 நாடுகளின் தூதராக இருந்தேன்... எனக்கே இந்த கதி!

Staff Writer

இந்தியாவின் தூதராக 3 நாடுகளில் இருந்திருந்தபோதிலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரச் சீர்திருத்தச் செயல்முறையில் அவதிப்பட்டதாக தூதர் நவதீப் சூரி தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரச் சீர்திருத்தம் இந்தியாவின் 16 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு :

"பஞ்சாப்பில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரச் சீர்திருத்தத்தில், என்னுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு இரண்டையும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பித்தேன். அப்போது அனைத்தும் சரியாக இருப்பதாகக் கூறினார்.

பின்னர், 2003ஆம் ஆண்டின் சீர்செய்த பட்டியலுடன் எனது தகவல்கள் பொருந்தவில்லை என்று எனக்கு குறுஞ்செய்தி வந்தது.

அதைத் தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் பேசும்போது, நான் நேரில் சென்று எனது நோட்டீஸைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும், வரும்போது நான் இந்திய குடிமகன் என்று உறுதியளிக்கும் வேறு சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும் என்று சொன்னார்.

அப்போது 2003ஆம் ஆண்டு, நான் இந்தியாவில் இல்லை என்று நான் கூறியதால், ஆதாரமாக என்னுடைய பாஸ்போர்ட்டைக் கேட்டார்கள்.

என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை தவிர வேறு ஆவணங்களும் உள்ளன. ஆனாலும் இந்தக் கோள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.

மூன்று நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய எனது குடியுரிமையை நிலைநாட்டுவதற்கே இவ்வளவு சிக்கல் என்றால், ஒரு சாதாரண குடிமகனின் கதி என்னவாகும்?" என்று கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram