ரூ.16 கோடிக்கு ஏலம் சென்ற காந்தியின் கடிதங்கள் 
இந்தியா

ரூ.16 கோடிக்கு ஏலம்போன காந்தியின் கடிதங்கள்!

Staff Writer

இந்திய வரலாற்று ஆவணங்களில், அதிக தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்ட ஆவணமாக இந்த கடிதங்கள் உலக சாதனை படைத்துள்ளது.

இந்தக் கடிதங்கள் அனைத்தும் மகாத்மா காந்தி, தன் கைப்பட எழுதியவை ஆகும்.

உண்மை, அகிம்சை, பிரம்மச்சரியம், உடைமை தவிர்த்தல், அச்சமின்மை, மத சமத்துவம், தீண்டாமை உட்பட்ட பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட மகாத்மா காந்தியின் 688 கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு ஹிங்கோராணி குடும்பத்தினரால், பல தலைமுறைகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது.

நேற்று சாப்ரானார்ட் நிறுவனம் நடத்திய ஏலத்தில், இந்தப் பிரதிகள் ரூ. 16.20 கோடிக்கு விற்பனையானது.

இந்தக் கடிதங்களுடன், காந்தியின் புகைப்படங்கள், தனிப்பட்ட பொருட்கள் அடங்கிய 86 தொகுப்புகளும் ஏலம் விடப்பட்டன.

இதில், மெசேஜ் ஆன் காட் என்ற தொகுப்பு ரூ. 1.68 கோடிக்கு விற்பனையானது.

மேலும், காந்தியின் தனிப்பட்ட பொருட்கள் அடங்கிய காந்தியின் பெட்டிராட்டை, 2 கடிதங்கள் அடங்கிய தொகுப்பு ரூ. 1.08 கோடிக்கு விற்பனையானது.

காந்தி எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட, அவரது கையொப்பம் இடப்பட்ட புகைப்படம் ரூ. 78 லட்சத்திற்கு விற்பனையானது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram