பீகார் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக விரும்புவதாக கூறியுள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விளக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார். பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்: "இருபது ஆண்டுகளுக்கு மேலாக என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வந்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையின் காரணமாகவே பீகார் வளர்ச்சியை கண்டுள்ளது. அதற்கு என் நன்றிகள்.
தொடக்கத்தில் இருந்தே சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. எனவே. இம்முறை மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன். பீகாரில் அமையப்போகும் புதிய அரசுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்." என்றும் பதிவிட்டுள்ளார்.