சுதந்திர தின விழா காவல் பதக்கங்கள் 
இந்தியா

ஜனாதிபதி பதக்கம் பெறும் 3 போலீஸ் அதிகாரிகள் யார்யார்?

Staff Writer

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி பதக்கங்களைப் பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று போலீஸ் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதக்கம் பெறும் போலீஸ் அதிகாரிகள் :

1)    ஜெ.விஜய் ஆனந்த் – கூடுதல் எஸ்.பி.

2)    கே. ராமச்சந்திரன் - கூடுதல் எஸ்.பி.

3)    எஸ். குமார் – உதவி கமாண்டண்ட்

மேலும், தமிழக அரசின் சார்பில், தன்னலம் கருதாது பொதுமக்கள் சேவையில் ஈடுபட்ட 5 பேருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

முதல்வரின் பதக்கம் பெறும் அதிகாரிகள் :

1)    சசிமோகன் – திண்டுக்கல் டி.ஜி.ஜி.

2)    சண்முகப்பிரியா – விஜிலன்ஸ் எஸ்.பி.

3)    மணிமொழியன் – எஸ்.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.

4)    மதன்மோகன் – இன்ஸ்பெக்டர், தொழில்நுட்பப் பிரிவு, சென்னை

5)    ரவிக்குமார் – ஏட்டு, கரூர்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram