16 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
இந்தியா

தடைசெய்யப்பட்ட 16 மருந்துகள் என்னென்ன?

Staff Writer

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 16 பிக்ஸிட் காம்பினேஷன் மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அறிவியல்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மருந்தகங்களில் கிடைக்கும் இந்த மருந்துகளை 2021இல் இருந்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதால் உடல்நிலை முழுமையாக சரியாவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றும், இதனால் மக்களின் உடல்நலம் பாதிக்கலாம் என்பதால், இந்த 16 வகையான மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடைவிதிக்கப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியல்:

1. அமோக்ஸிசிலின் + செராட்டியோபெப்டிடேஸ் + லாக்டோபேசிலஸ் ஸ்போரோஜென்ஸ்

2. அமோக்ஸிசிலின் + செராட்டியோபெப்டிடேஸ்

3. அமோக்ஸிசிலின் + க்ளோக்ஸாசில்லின் + லாக்டிக் அமில பேசில்லஸ் + செராட்டியோபெப்டிடேஸ்

4. செஃபுராக்ஸைம் + செராட்டியோபெப்டிடேஸ்

5. செஃபட்ராக்ஸிலில் + புரோபெனெசிட்

6. டைசைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு + குளோர்டியாசெபாக்சைடு

7. டைசைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு

8. கற்றாழைச் சாறு + அலன்டோயின் + ஆல்பாடோகோபெரோல் அசிடேட் + டி-பாந்தெனால் + வைட்டமின் ஏ

9. கற்றாழைச் சாறு + வைட்டமின் E + டைமெதிகோன் + கிளிசரின்

10. அலோ வேரா + ஜோஜோபா எண்ணெய் + வைட்டமின் ஈ

11. கற்றாழை + ஆரஞ்சு எண்ணெய்

12. அலோ வேரா + வைட்டமின் ஈ + மூலிகை

13.பாராசிட்டமால் + லிக்னோகைன்

14. கிளைக்லாசைடு + குரோமியம் பிகோலினேட்

15. அமோக்ஸிசிலின் + செராட்டியோபெப்டிடேஸ்

16. அமோக்ஸிசிலின் + செஃபுராக்ஸைம்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram