ரூ. 3000 கோடி போதைப்பொருள் பறிமுதல் 
இந்தியா

ரூ.3,000 கோடி போதைப்பொருளை பறிமுதல் செய்த இந்திய கடற்படை!

Staff Writer

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேரை, இந்திய கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது.

இந்திய கடலோரக் காவல்படையும், குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படையும் இணைந்து அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஈரானைச் சேர்ந்த படகை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்தப் படகில் பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர், ரூ. 3000 கோடி மதிப்புள்ள 526 கிலோ ஹெராயின், மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்கள் கடத்தியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, போதைப்பொருள், படகை பறிமுதல் செய்த இந்திய கடலோரக் காவல்படையினர், பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேரையும் மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்த அறிக்கையை இன்று வெளியிட்ட இந்திய கடலோரக் காவல்படை, இந்தியாவின் கடல் எல்லைகள், விரிவாக்கப்பட்ட கடல்சார் மண்டலங்களுக்குள் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடைமுறை கடைபிடிக்கப்படுவதாக குறிப்பிட்டது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram