துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஃ ப்ளைதுபாய் விமானத்தை தகர்க்க முயன்ற சதியை, இந்திய விமானி ஸ்மித் மச்சார் முறியடித்துள்ளார்.
துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு, 24 குழந்தைகள் உட்பட 180 பேருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை விமானி ஸ்மித் மச்சார், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியுடன் போயிங் ரக விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானம் சவுதி அரேபியா எல்லையைக் கடந்து, ஜோர்டான் வான்பரப்பில் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, தான் ரகசியமாக வைத்திருந்த கத்தியை எடுத்து, இந்திய விமானி ஸ்மித் மச்சாரைத் தாக்கினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த தலைமை விமானியிடம் இருந்து, விமானத்தின் கட்டுப்பாட்டைப் பறித்த துணை விமானி, விமானத்தை தரையில் மோதி வெடிக்கச் செய்வதற்காக, வெறும் 30 விநாடிகளில் 14,000 அடிக்குச் செங்குத்தாக விமானத்தை கீழ்நோக்கி செலுத்தினார்.
காயமடைந்த நிலையிலும், விமானத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர போராடிய தலைமை விமானி ஸ்மித் மச்சார், ஆபத்து சிக்னலை அனுப்பியதுடன், காக்பிட் கதவைத் திறந்தார்.
காக்பிட்டை திறந்தவுடன் உள்ளே சென்ற சக விமானப் பயணிகள், இராணுவ வீரர்கள் உள்நுழைந்து ஓமன் துணை விமானியை மடக்கிப் பிடித்து கயிற்றால் கட்டினர். இஸ்ரேலி நாட்டு பயணி ஒருவர் அந்த துணைவிமானியை சீட்டை விட்டுத் தூக்கி எறிந்தார். பின்னர் விமானத்தை மேலே எழச் செய்யும் லீவரை இழுத்து நிலைப்படுத்தினார்.
பின்னர், ரிசர்வ் விமானியின் உதவியுடன் விமானம் பத்திரமாக சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
காயமடைந்த இந்திய விமானி, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் இஸ்ரேலியர்களை குறிவைத்து, ஒட்டுமொத்த விமானத்தையும் மோதி தகர்க்க நடத்தப்பட்ட பயங்கரவாத சதி என்று இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு, இந்திய விமானி ஸ்மித் மிச்சாரை உண்மையான நாயகன் என்று பாராட்டியுள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இந்திய விமானியின் துணிச்சலான செயலைக் கண்டு இந்தியா பெருமைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்ற உலகத் தலைவர்கள் பலரும் இந்திய விமானி ஸ்மித் மிச்சாரின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். இன்னொரு 9/11 நிகழ்வு நடக்காமல் காப்பாற்றிவிட்டார் என்று அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.