காணாமல்போன மீட்புக் குழுவினரை தேடும் பணி  
இந்தியா

மீனவர்களை மீட்கச் சென்ற 10 பேர் காணோம்... ஒருவழியாக மீட்பு!

Staff Writer

தெலுங்கானாவின் பெத்துப்பள்ளி ஏரியில் சிக்கியிருந்த மீனவர்களை மீட்கச் சென்ற 10 பேர் கொண்ட மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மாயமாகினர்.

முரசுப் புயல் எதிரொலியாக தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆந்திரக் கடல் பகுதியில் புயல் கரையைக் கடந்ததால், முரசுப் புயலின் தாக்கம் ஆந்திர, தெலுங்கானாப் பகுதிகளில் சற்று அதிகமாக இருந்தது.

இந்நிலையில், தெலுங்கானாவின் பெத்துப்பள்ளி ஏரியில் 9 மீனவர்கள் சிக்கிக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் 10 பேர், இரண்டு படகுகளில் மீனவர்களை மீட்கச் சென்றனர்.

அப்போது, அவர்கள் சென்ற இரண்டு படகுகளும் தண்ணீரில் எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்தன.

அதைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினரைத் தேடும் பணி கடந்த இரண்டு நாள்களாக தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை காணாமல்போன மீட்புக் குழுவினர், சிக்கியிருந்த மீனவர்கள் அனைவரும் வியாழக்கிழமை காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram