சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் 
இந்தியா

சர்வதேச விமான நிலையத்திற்கு மோடியின் பெயர்!

Staff Writer

நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை வைக்க உத்தரப்பிரதேச அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜேவரில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2021ஆம் ஆண்டு, அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 28ஆம் தேதி, அந்த விமான நிலையத்தின் முதலாவது முனையைத்தை அவர் திறந்து வைத்தார்.

அதையடுத்து, கடந்த ஜூன் முதல் அங்கிருந்து பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், அந்த சர்வதேச விமான நிலையத்திற்கு மோடியின் பெயர் வைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இனி அந்த விமான நிலையம் 'நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம், நொய்டா – ஜேவர்' என அழைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram