கள ஆய்வில் கர்நாடக அமைச்சர் 
இந்தியா

'சில்லரை இல்லையா, கீழே இறங்கு...' போக்குவரத்து அமைச்சரை இறக்கிவிட்ட கண்டக்டர்!

Staff Writer

முகக்கவசம் அணிந்து 100 ரூபாய் நீட்டியவர் அமைச்சர் என்று அந்த கண்டக்டருக்குத் தெரியவில்லை. அதனால் இந்த கூத்து நடந்துள்ளது.

கர்நாடகப் போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷை, சில்லரை இல்லை என்பதற்காக பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து கண்டக்டர் கீழே இறக்கிவிட்டுள்ளார்.

அமைச்சரும் அதற்கு இணங்கி, அமைதியாக, பேருந்திலிருந்து இறங்கிச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகப் பொதுப்போக்குவரத்து குறித்த கள ஆய்வை அமைச்சர் மேற்கொண்டபோதே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹெப்பல் எனும் இடத்திலிருந்து நாகசெட்டிஹள்ளிக்குச் செல்லும் பேருந்தில் மாஸ்க் அணிந்து ஏறிய பைரதி சுரேஷ், கண்டக்டரிடம் ரூ.100-ஐக் கொடுத்துள்ளார்.

உரிய சில்லறையைச் செலுத்துமாறும், இல்லாவிடில் யு.பி.ஐ. மூலம் கட்டணம் செலுத்துமாறும் கண்டக்டர் கேட்டுள்ளார்.

அவ்வாறு தன்னால் கட்டணம் செலுத்த முடியாது என அமைச்சர் கண்டக்டரிடம் விளக்கியுள்ளார்.

தன்னிடம் சில்லரை இல்லை எனக்கூறி தனது பையை காட்டிய கண்டக்டர், போக்குவரத்து துறை அமைச்சரை கீழே இறக்கிவிட்டுள்ளார்.

போக்குவரத்து துறையின் செயல்பாடுகள், பேருந்தின் வசதிகள், பயணிகளிடம் பேருந்து ஊழியர்கள் நடந்துகொள்ளும் விதம், போக்குவரத்துத் துறை ஊழியர்களின் சிரமங்கள், பயணிகள் எதிர்கொள்ளும் சிரமம் ஆகியவற்றை அறிந்துகொள்வதற்காக, இரவு 7 மணி முதல் 9 மணி வரை அமைச்சர் பேருந்தில் பயணம் செய்து களஆய்வை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram