கட்சி மற்றும் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்த கவிதா 
இந்தியா

நேற்று நீக்கம்… இன்று விலகல்! – கவிதா அதிரடி

Staff Writer

பாரத் ராஷ்டிரிய சமிதியில் இருந்து நேற்று இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதேபோல் சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

பாரதிய ராஷ்டிரிய சமிதியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கவிதா, கட்சிக்கு களங்கள் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக செவ்வாய்க்கிழமை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தந்தை - மகள் இடையிலான மோதல் காரணமாக கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்துள்ளார். தமது எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்வதாகவும், இதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி விட்டதாகவும் கூறி உள்ளார்.