யு.பி.ஐ. பரிவர்த்தனை 
இந்தியா

ரூ.30 இலட்சம் கோடியை எட்டி யு.பி.ஐ. பரிவர்த்தனை சாதனை!

Staff Writer

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், யு.பி.ஐ. பரிவர்த்தனை ரூ. 30 லட்சம் கோடியை எட்டி சாதனைப் படைத்துள்ளது.

இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம், கடந்த 2015ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியுடன் இணைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தியது.

தற்போது, தெருக்கடைகள் முதல் அனைத்து வர்த்தக இடங்களிலும் யு.பி.ஐ. எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை பெரும் வரேவற்பைப் பெற்றுள்ளது.

இந்தியா, பூடான், பிரான்ஸ், அரபு அமீரகம் உட்பட்ட 11 நாடுகளில் இந்தச் சேவை இந்த ஆண்டில் அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2,451 கோடி முறை பரிவர்த்தனையின் மூலமாக ரூ.30 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளதாக இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 24.85 லட்சமாக இருந்த யு.பி.ஐ. பரிவர்த்தனை, நடப்பு ஆண்டின் அதே ஆகஸ்ட் மாதத்தில் ரூ.29.9 லட்சமாக உயர்ந்து, 20% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மேலும், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 22% வளர்ச்சியுடன் நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 2,451 கோடியாக உயர்ந்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram