சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரரும் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா காலமானார். 
இந்தியா

துப்பாக்கிச் சுடும் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்!

Staff Writer

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் வெற்றியாளரும், சிறந்த பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா காலமானார்.

இதயப் பிரச்னை காரணமாக தனது 49 வயதில் இவர் இறந்துபோனது விளையாட்டு வீரர்களையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெர்மனியில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். போட்டி முடிந்து விமானத்தில் திரும்பும்போது இவரின் உடல்நலம் பாதிப்புக்குள்ளானது.

விமானம் தரையிறங்கியவுடன் புதுதில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. முதலில், நலமாக இருந்த இவரின் உடல்நலம் பின்பு மோசமடைந்தது.

இந்நிலையில் நேற்று தில்லி மருத்துவமனையில் இவரின் உயிர் பிரிந்தது.

ஒரு சிறந்த விளையாட்டு வீரராக பல தங்கப்பதக்கங்களைப் பெற்ற அவர், கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த பயிற்சியாளராகவும் விளங்கினார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் வீரர் மனு பாகர், துப்பாக்கிச் சுடும் வீரர்கள் சௌரப் சௌத்ரி, அனிஷ் பன்வாலா, சிங்கி யாதவ் ஆகியவர்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார்.

கடைசியாக இவர் வழிகாட்டுதலில் பங்கேற்ற ஜெர்மனியில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலகக் கோப்பையில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி என நான்கு பதக்கங்களை வீரர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram