முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். இளம் மனங்களைத் தூண்டி, நம் தேசத்தைப் பெரிய கனவு காணத் தூண்டிய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூரப்படுகிறார்.
வெற்றிக்கு பணிவுத்தன்மையும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை, வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.