தொலைக்காட்சி சேனல்களில் தடையில்லா விளம்பரம் 
இந்தியா

இனி விளம்பரத்துக்குத் தடையில்லை- டிவி சேனல்களுக்கு திருப்தி!

Staff Writer

தொலைக்காட்சி சேனல்களில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்கள் ஒளிப்பரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 முதல் 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்தக் கட்டுப்பாடு, தற்போது ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாடு விதித்தபோது, இந்தியாவில் மொத்தம் 62 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது 900-க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளதாகவும் தகவல் – ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடைமுறையில் பல ஆண்டுகளாக இருந்த இந்தக் கட்டுப்பாடு, வருவாயைப் பெருமளவில் பாதிப்பதாக தொலைக்காட்சி நிறுவனங்கள், ஒளிபரப்பாளர்கள் நீண்ட காலமாக எதிர்த்து வந்தனர்.

இந்நிலையில், அரசின் இந்த முடிவால் இனி சேனல்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப விளம்பர நேரத்தைத் தீர்மானித்துக்கொள்ள முடியும்.

இதன்மூலம், அவர்களின் விளம்பர வருவாயும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram