நாடாளுமன்ற மக்களவை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை அவைத்தலைவர் ஓம் பிர்லா ஏற்காததால் எதிர்க்கட்சியினர் விடாது தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அவையை நடத்தமுடியாமல் போகவே இன்று நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக ஓம்பிர்லா அறிவித்தார்.
முன்னதாக, பிரதமர் மோடியைத் தாக்க சதிசெய்ததாக தமிழக பெண் உறுப்பினர்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் மீது ஓம்பிர்லா அதிர்ச்சிக் குற்றச்சாட்டைச் சுமத்தினார். அதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.