லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் இராணுவத் தளபதியாக பதவியேற்க உள்ளார். 
இந்தியா

ராணுவத் தளபதி ஆகிறார் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்

Staff Writer

இராணுவத் துணைத் தளபதியாக பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் இந்த மாதம் ஜுன் 30ஆம் தேதி இராணுவத் தளபதியாக பதவியேற்க உள்ளார்.

இவர் ஆகஸ்ட் 31, 2028 வரை பதவி வகிப்பார் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் பாலைவனப் பகுதி கவசப் படை, மேற்குப் போர்க்கள கவசப் படை, ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்புப் படை ஆகியவற்றுக்குத் தலைமை தாங்குவார் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தீரஜ் சேத் 1986-ல் கவசப் படையின் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர், இராணுவத்தின் முதன்மையான தாக்குதல் படைப்பிரிவுகளில் ஒன்றான சுதர்ஷன் சக்ரா படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். புதுடெல்லி பகுதியின் தளபதியாகப் பணியாற்றிய இவர் தென்மேற்கு, தெற்குப் படைப்பிரிவுகளுக்கும் தலைமை தாங்கியுள்ளார்.

தற்போது இராணுவத் தலைமைத் தளபதியாக இருக்கும் ஜெனரல் உபேந்திர திவேதி, ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram