சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோற்கவில்லை என்றும் எனவே, தாங்கள் பதவிவிலகப் போவதில்லை என்றும் மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
தேர்தலில் திரிணமூல் காங்கிரசின் போட்டியானது பா.ஜ.க.வுக்கு எதிரானது அல்ல, மாறாக ’பா.ஜ.க.வுக்காக’ப் பணியாற்றிய தேர்தல் ஆணையத்திற்கு எதிரானது என்றும் மமதா குற்றம் சாட்டியுள்ளார்.
"நாங்கள் மக்கள் தீர்ப்பால் தோற்கடிக்கப்படவில்லை, மாறாக ஒரு சதியால் தோற்கடிக்கப்பட்டோம். எனவே, எனது பதவி விலகல் என்ற கேள்விக்கே இடமில்லை... நான் தோற்கவில்லை; நான் லோக்பவனுக்குச் செல்ல மாட்டேன். அரசியலமைப்பு விதிமுறைகளின்படி அவர்கள் நடவடிக்கை எடுக்கலாம்." என்று கொல்கத்தாவில் இன்று பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
“இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க என்னை அழைத்தார்கள். சோனியாஜியும் இராகுல் காந்தியும் என்னிடம் பேசினர்.” என்றும் மமதா கூறினார்.