இந்தியா

மோடி ஆட்சியில் இப்படித்தான்… கழிவறையில் செல்லும் பயணிகள்!

Staff Writer

பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயிலில் செல்வதே ஒருவகையான தண்டனையாகிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயிலில் செல்வதே ஒருவகையான தண்டனையாகிவிட்டது!

சாதாரண ரயில்களில் பொதுப்பெட்டிகளை குறைத்து 'எலைட் ரயில்களை' மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசால் அனைத்து பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

முன்பதிவு டிக்கெட்டுகளை பெற்ற மக்கள்கூட தங்கள் இருக்கைகளில் நிம்மதியாக உட்கார முடியாத நிலையில், சாமானியர்கள் தரையிலும், கழிப்பறையிலும் பதுங்கி பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் அரசு, தனது கொள்கைகளால் ரயில்வே துறையை பலவீனப்படுத்தி, தகுதியற்றதாக நிரூபிக்க விரும்புகிறது, இதனைக்கொண்டு தன் நண்பர்களுக்கு விற்க ஒரு காரணத்தை தேடுகிறது.” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.