77 அடி உயர ராமர் சிலை 
இந்தியா

ஆசியாவிலேயே உயரமான ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Staff Writer

கோவாவில் 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை சிலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிலை ஆசியாவிலேயே உயரமானது.

கோவாவின் கனகோனாவில்உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தின் 550ஆவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக ராமரின் 77 அடி வெண்கல சிலை, இன்று நிறுவப்பட்டது. இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நொய்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி ராம் சுதாரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ராமர் சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.