மோடியின் செல்ஃபி வீடியோ 
இந்தியா

மோடியின் வீடியோவை பிளாக் செய்த முகநூல்!

Staff Writer

முகநூலில் மோடி வெளியிட்ட வீடியோவை தவறுதலாக பிளாக் செய்துவிட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு குறித்து ஜென்ஸி தலைமுறையினருக்கு செல்ஃபி வீடியோ ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.

ஆனால், முகநூல் பக்கத்தில் அந்த வீடியோ பிளாக் செய்யப்பட்டதாகக் காண்பித்தது.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களுக்காக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை கிளிக் செய்தபோது, கிடைக்கவில்லை என்று சிறிது நேரம் வந்த நிலையில், சற்று நேரத்தில் மீண்டும் வீடியோ வெளியானது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்டது குறித்து மெட்டா நிறுவனத்திற்கு அரசு சார்பில் சம்மன் பிறப்பிக்கப்பட்டது.

மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால், இந்த சம்மன் பிறப்பிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்டு, பிறகு அது சரிசெய்யப்பட்டதாக மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram