சோனம் வாங்சுக் 
இந்தியா

என் பேச்சுரிமை, நடமாடும் உரிமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: சோனம் வாங்சுக்

Staff Writer

பத்தொன்பது நாள்களாக, நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த சனிக்கிழமை அன்று உடல்நிலை குன்றியதாக அவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்து:

"நான் என்னுடைய உண்ணாவிரதத்தை ஜூலை 20ஆம் தேதியுடன் முடித்துக்கொள்கிறேன். ஆனால், அதற்கு மூன்று நிபந்தனைகள்.

1) கல்வித்துறையில் ஏற்பட்ட தவறுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

2) நான், கரப்பான் பூச்சி கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தை அணுகினால், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்த விவாதத்தை முன்னெடுப்போம் என்று உறுதியளிக்க வேண்டும்.

3) மேற்கண்ட நடவடிக்கைகளில் என்னால் ஈடுபட முடியவில்லை என்றால், எம்.பி.க்கள் அனைவரும் இந்த மருத்துவமனைக்கு வந்து உறுதியளியுங்கள்." என்று பதிவிட்டுள்ளார் சோனம் வாங்சுக்.

மேலும், சட்டத்திற்குப் புறம்பாக என்னை இந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளதால், என்னுடைய பேச்சுரிமை, நடமாடும் உரிமை ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் வாங்சுக் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram