தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள் 
இந்தியா

நீட் தேர்வு மைய ஊர்களின் விவரம் வெளியீடு!

Staff Writer

எம்.பி.பி.எஸ். முதலிய மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதவேண்டிய ஊர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதை இன்று வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை என்.டி.ஏ., விரைவில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் பிறந்த நாள், விண்ணப்ப எண்ணை உள்ளிட்டு,தேர்வு மைய ஊர் விவரத்தை அறிந்துகொள்ளலாம். எண்டிஏ-வின் இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்குள்ள இணைப்பைச் சொடுக்கினால் தேவையான விவரங்களைப் பெறமுடியும். 

அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வு மதிப்பெண் தர வரிசையின்படி, எம்.பி.பி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும். 

இந்தத் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. ஜூன் 14ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.