நாடு முழுவதும் நாளை மருத்துவ இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான நீட்தேர்வு நடைபெறவுள்ளது. முன்னைய கட்டுப்பாடுகளில் சிலவற்றை மாற்றியும் கூடுதலாகவும் தேசிய தேர்வு முகமை புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தேர்வுக்கு வரும் மாணவர்கள் முற்பகல் 11 மணி முதல் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 1.30 மணிவரை மட்டுமே மாணவர்களுக்கு அனுமதி. அதற்குமேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதுவரை அரைக் கை சட்டை மட்டுமே அணியமுடியும் என இருந்தது, இப்போது முழுக்கை சட்டையையும் அணியலாம் என மாற்றப்பட்டுள்ளது.
காலணிகள் எளிமையானவையாக இருக்க வேண்டும். தடிமன் அதிகமுள்ள காலணிகளுக்கு அனுமதி இல்லை.
பளிங்கு போல நிறமுள்ள தண்ணீர்க் குடுவைகளுக்கு மட்டும்தான் அனுமதி என்றும் கூறப்பட்டுள்ளது.