யு.பி.ஐ.  
இந்தியா

பிஎஃப் கணக்கிலிருந்து யு.பி.ஐ. மூலமாக பணம் எடுக்கும் வசதி!

Staff Writer

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து வரும் டிசம்பர் மாதம் முதல் யு.பி.ஐ. மூலமாகப் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தற்போது நடப்பில் இருக்கும் நடைமுறையின்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கு, அதற்கான இணையதளத்தில் பல்வேறு விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

எனவே, இதை எளிமையாக்கும் வகையில், அடுத்த மாதம் முதல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து யு.பி.ஐ. மூலமாக பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டது.

இந்தப் புதிய வசதிக்கான தொழில்நுட்ப பணிகளை தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், பாரத ஸ்டேட் வங்கி உட்பட்ட நிறுவனங்கள் இணைந்து செய்து வருகின்றன. இதற்கான பாதுகாப்பு, செயல்திறன் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனையின்போது 102 வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, ரூ. 5 லட்சம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் உடனடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், சிறிய தொகைகளுக்கு அடிக்கடி பணம் எடுப்பதால் ஏற்படும் பரிவர்த்தனைச் சுமையைக் குறைப்பதற்காக குறைந்தபட்சமாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் புதிய பரிவர்த்தனை 'பீம்' செயலி மூலமாக நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. யு.பி.ஐ. வசதி அறிமுகம் செய்யப்பட்டாலும் தற்போது உள்ள பணம் எடுக்கும் விதிமுறைகளும், வரம்புகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram