இந்தியா

இனி ‘கேரளா' இல்லை ‘கேரளம்..!’

Staff Writer

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற கோரி அம்மாநில அரசின் தீர்மானத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். 

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற கோரி 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது.

இதனையடுத்து 2024ஆம் ஆண்டு உரிய திருத்தங்களுடன் அரசியல் சாசனத்தின் 3ஆவது பிரிவின் கீழ் மற்றொரு தீர்மானம், கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது கேரளா மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளா மாநில அரசின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அம்மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தியுள்ளார்.