இந்தியா

10 மாதக் குழந்தையின் உடல் உறுப்பு தானம்... குவியும் பாராட்டுகள்!

Staff Writer

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த 10 மாத பெண் குழந்தையின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயம் நகரில் பல்லம் என்ற இடத்தில் கடந்த 5ஆம் தேதி சாலை விபத்து ஒன்று ஏற்பட்டது. அதில், பத்​தனம்​திட்டா மாவட்​டத்​தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் படு​காயமடைந்தார். அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை​யில் நேற்று முன்​தினம் மூளைச் சாவு அடைந்​த​தாக மருத் ஊ​து​வர்​கள் அறி​வித்​தனர். இதையடுத்து, மருத்​து​வர்​கள் குழந்​தை​யிட​மிருந்து கல்​லீரல், 2 சிறுநீரகங்​கள், இதய வால்​வு, 2 கண்​கள் ஆகிய​வற்றை தானமாக பெற்​றனர். இதைத் தொடர்ந்து குழந்​தை​யின் கல்​லீரல், திரு​வனந்​த​புரம் கிம்ஸ் மருத்​து​வ​மனை​யில் உள்ள 6 மாதக் குழந்​தைக்​குப் பொருத்​தப்பட உள்​ளது.

சிறுநீரகங்​கள், திரு​வனந்​த​புரம் மருத்​து​வக் கல்​லூரி​யில் உள்ள மற்​றொரு குழந்​தைக்கு வழங்​கப்​பட்​டது. இதய வால்வு மற்​றும் கண்​கள், சித்ரா இன்​ஸ்​டிடியூட் மற்​றும் அமிர்தா மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறு​வோருக்கு தான​மாக வழங்​கப்​பட்​டன.

இதன் மூலம் கேரளா​விலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை அலின் ஷெரினுக்கு கிடைத்​துள்​ளது. இதையடுத்து ஷெரின் தொடர்​பான செய்​தி​கள், புகைப்​படங்​கள், வீடியோக்​கள் சமூக ஊடகங்களில் வைரலாகி​யுள்​ளன.

இதுகுறித்து கேரள சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் வீணா ஜார்ஜ் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறும்​போது, “குழந்தை இறந்த துக்​கத்​தில் இருந்​த​போதும், குழந்​தை​யின் உறுப்​பு​களை பெற்​றோர் தான​மாக அளித்​தது பாராட்​டுக்​குரியது. துயரத்​தில் இருக்​கும் குடும்​பத்​துக்கு மாநில அரசு துணை நிற்​கிறது. அவர்​களின் செயல் கேரளா​வில் உறுப்பு தானம் குறித்த விழிப்​புணர்​வை அதி​கப்​படுத்​தி​யுள்​ளது’’ என்​றார்​.