நாடாளுமன்றம் 
இந்தியா

இரண்டாவது வாரம்... இன்றும் முடங்கிய நாடாளுமன்றம்!

Staff Writer

எதிர்க்கட்சி எம்.பி.களின் அமளியால், இரண்டாவது வாரத்தின் முதல் நாளான இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது.

நீட் முறைகேடுகள், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இரண்டாவது வாரமாக இன்று கூடிய நாடாளுமன்றத்தில், அவை தொடங்கியதும் ஜந்தர் மந்தரில் அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது ஏன் என்பது உட்பட்ட கேள்விகளை எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி, வளாகத்திற்குள் இவர்கள் போராட்டத்தை நடத்தினர்.

முன்னதாக தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இன்று மக்களவை எம்.பி.ஆக வருகை புரிந்தார். அவருக்கு தலைப்பாகை, சால்வை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram