நாடாளுமன்றம் 
இந்தியா

வந்தே மாதரத்துடன் முடிவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர்!

Staff Writer

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய இந்த மழைக்காலக் கூட்டத்தொடர், இன்றுடன் நிறைவடைந்தது.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நீட் தேர்வு விவகாரம், அயோத்தி கோயில் மோசடி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகளை அவையில் எழுப்பியதால், இரு அவைகளும் தொடர்ந்து முடங்கின.

தொடர் கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியிலும், 12 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

கேரளம் பெயர் மாற்ற மசோதா, வந்தே மாதரம் தொடர்பான தேசிய அவமதிப்பு தடுப்புத் திருத்த மசோதா, எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டுத் திருத்த மசோதா, சுரங்கங்கள்-கனிமங்கள் திருத்த மசோதா உட்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து, இன்று இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற வரலாற்றில், இன்றுதான் வந்தே மாதரம் பாடலின் முழுமையான 6 சரணங்களும் மொத்தம் 3 நிமிடங்கள் 10 விநாடி அவையில் இசைக்கப்பட்டது, முக்கியத்துவம் பெற்றுள்ளது.    

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram