விமானம் 
இந்தியா

நடுவானில் விமானம் குலுங்கியது... 12 பேர் காயம்!

Staff Writer

தாய்லாந்திலிருந்து தில்லிக்கு வந்த விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயமடைந்தனர்.

தாய்லாந்து நாட்டின் பூக்கெட்டிலிருந்து தில்லி விமான நிலையம் நோக்கி ஏர் இந்தியாவின் ஏஐ2379 விமானம் வந்துகொண்டிருந்தது.

அப்போது, வானில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து குலுங்கியது.

இதனால், விமானம் தரையிரங்குவதற்கு முன்னரே தன்னுடைய பறக்கும் உயரத்தை இழந்தது. இருப்பினும், தில்லி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் பயணித்த 10 பயணிகள், 2 விமான ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களைப் பத்திரமாக மீட்டு விமான நிலைய மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram