பிரிக்ஸ் மாநாட்டுக்காக ரசிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மாலையில் புதுதில்லிக்கு வந்தார்.
பிரதமர் மோடி அவரை வரவேற்றார். அப்போது அவருக்கு திருக்குறள் நூலைப் பரிசாக அளித்தார்.
”ரசிய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரசிய மொழிபெயர்ப்புப் பிரதியைப் பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.” என்று பிரதமர் மோடி தன் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.