பிரதமர் மோடி- சுபான்சு சுக்லா 
இந்தியா

விண்வெளியில் அல்வா தின்றார்களா?- மோடி கேட்ட கேள்வி!

Staff Writer

சர்வதேச விண்வெளிக்குச் சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதை மோடி இன்று மாலையில் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டார். 

மொத்தம் 18 நிமிடங்கள் 9 வினாடிகள் ஓடக்கூடிய அந்தக் காணொலியில், சுக்லாவைப் பாராட்டி மோடி உரையாடலைத் தொடங்குகிறார். 

முற்றிலும் இந்தியில் அமைந்த இந்த உரையாடலில் மோடி சுக்லாவிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார். 

அதற்கு சுபான்சு சுக்லா விரிவாக பதில் அளிக்கிறார். 

முன்னதாக, அவரிடம், பிரதமர் மோடி இங்கிருந்து கொண்டுசென்ற அல்வாவை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளவர்கள் சாப்பிட்டார்களா எனக் கேட்டதற்கு, அனைவரும் சுவைத்துச் சாப்பிட்டார்கள் என்றும் மற்ற இனிப்புகளையும் அவர்கள் சாப்பிட்டதாகவும் சுக்லா கூறினார்.