ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி. போராட்டம் 
இந்தியா

நள்ளிரவில் பிரதமர் வெளியிட்ட வீடியோ... நிராகரித்த கரப்பான் கட்சி!

Staff Writer

தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருவதால், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் காணொலி ஒன்றை பிரதமர் மோடி நேற்று நள்ளிரவில் வெளியிட்டார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

" வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்கள், கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையிலான மசோதாவை அரசு அறிமுகப்படுத்தும்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும். நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு முன்னெடுக்கும்.

நீட் வினாத்தாள் கசிவு குறித்து கேள்விப்பட்டதும், அரசு விரைவாக்ச் செயல்பட்டது. மாணவர்களின் கல்வி ஆண்டு வீணாகாமல் இருப்பதை உறுதிசெய்ய, மறுதேர்வை உடனடியாக நடத்தியது. மேலும், கல்வித் துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய உயர்கல்விச் செயலாளராக நரேஷ் பால் கங்வாரும், பள்ளித் கல்வி - எழுத்தறிவுத் துறைச் செயலாளராக டி.கே. அனில் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்." என்று மோடி கூறினார்.

இந்நிலையில், பிரதமரின் வாக்குறுதியை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முழுமையாக நிராகரித்துள்னர்.

மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான்பூச்சி கட்சி சி.ஜே.பி.யின் தலைவர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram