பீகார் அராரியாவில் பிரதமர் மோடி பிரச்சாரம்
பீகார் அராரியாவில் பிரதமர் மோடி பிரச்சாரம் 
இந்தியா

எதிர்க்கட்சிகளை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார் மோடி!

Staff Writer

மக்களவைத் தேர்தல் இன்று இரண்டாம் கட்டமாக நடந்துவரும் நிலையில், எந்திர வாக்குப்பதிவுக்குத் தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதை அமோகமாக வரவேற்றுள்ள பிரதமர் மோடி, இந்தத் தீர்ப்புக்காக எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

பீகாரின் அராரியா எனும் இடத்தில் இன்று காலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், அவர் இவ்வாறு கூறினார். 

இந்தத் தீர்ப்பு வெளியானதால் இந்த நாள் மங்கலகரமானது எனக் குறிப்பிட்ட மோடி, எதிர்க்கட்சிகளின் முகத்தில் நீதிமன்றம் பலமாக அறைந்திருக்கிறது என்றும் கூறினார். 

ஏற்கெனவே சில கூட்டங்களில் கூறியதைப் போல, இன்றும், காங்கிரஸ் கட்சியானது பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்குப் பகிர்ந்துகொடுத்து பறிக்கப் பார்க்கிறது என்று மதரீதியாகப் பேசினார். 

தேர்தல் விதிமுறைகளின்படி சாதி, மதம் போன்றவற்றின்படி மக்களிடம் வேற்றுமை உண்டாகும்வகையில் பிரச்சாரம் செய்யக்கூடாது எனத் தெளிவாக இருந்தும், பிரதமர் மோடி மீது இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டும் அவர் இப்படிப் பேசுவதைத் தொடர்ந்துவருகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.