பிரசாந்த் கிஷோர் 
இந்தியா

பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

ம.தினோவிகா

பீகாரின் பங்கிப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா, பீகாரின் பங்கிப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் வெற்றிபெற்றார்.

இந்தத் தொகுதியில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நிதின் நபின், அவரின் குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக வென்றுவந்தது குறிப்பிடத்தக்கது.