மருந்தகங்களில் அனைத்து வகையான சிரப் மருந்துகள் பெறவும் இனி மருந்துச்சீட்டு அவசியம் என்று மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
இருமல் உட்பட அனைத்து சிரப் மருந்துகளுக்கும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதலின்படி, பதிவுசெய்யப்பட்ட மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட மருந்துச்சீட்டு இருந்தால் மட்டுமே மருந்தகங்களில் சிரப் மருந்தைப் பெற முடியும்.
மருத்துவர்களின் மேற்பார்வையின்றி மருந்துகளை உண்பதால் மக்களின் உடல்நலம் பாதிப்பதாகவும், சிரப் மருந்தை குழந்தைகளிடம் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், சுகாதார வல்லுநர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளை ஆராய்ந்த பிறகே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த புதிய வழிகாட்டுதலால், தவறான மருந்துகளை உட்கொள்வது, தவறான அளவில் எடுத்துக்கொள்வது ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்கமுடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.