இராகுல் காந்தி- முதல்வர் விஜய் 
இந்தியா

சென்னையில் முதல்வர் விஜய் - ராகுல் காந்தி சந்திப்பு!

Staff Writer

முதலமைச்சர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி இன்று பிற்பகல் வருகை புரிந்தார்.

தில்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னைக்கு வந்த அவரை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உட்பட்ட காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர், முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கிருந்து உணவு அருந்துவதற்காக இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர்.

இன்று மாலை தீவுத்திடலில் நடக்கும் மாணவர் சந்திப்பில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில், 10,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்குப் பின்னர், தமிழகம், புதுச்சேரியின் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடலும் மேற்கொள்கிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram