இந்தியா

இராகுல் பேச்சு- மக்களவையில் அமித்ஷா குறுக்கீடு, அமளி!

Staff Writer

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி இன்று காலையில் பேசியபோது, முன்னாள் படைத்தளபதி நரவானே எழுதிய நூலைப் பற்றிக் குறிப்பிட்டார். அவருடைய புத்தகத்தை வெளியிடவிடாமல் பா.ஜ.க. அரசு தடுப்பதாக இராகுல் குற்றம்சாட்டினார். 

சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத்சிங் ஆகியோரைப் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அதனால்தான் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

உடனடியாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத்சிங் ஆகியோர் இடைமறித்து பேசவிடாமல் தடுத்தனர். 

அமித்ஷா பேசுகையில் சத்தமிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களைக் கைகளைக் காட்டி அமர்த்தும்படி சைகை காட்டினார். 

இராகுலுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் அவையின் விதிகளைக் குறிப்பிட்டுப் பேசினார். அதைப் பற்றி அவைத்தலைவர் ஓம்பிர்லா கிண்டலடித்தார். 

முக்கியமான பிரச்னையை அவையில் எழுப்புவதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி உண்டு என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் பேசினார்.