சி.பி.இராதாகிருஷ்ணன் 
இந்தியா

ஆம் ஆத்மி 7 எம்.பி.களின் கட்சித்தாவலுக்கு மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல்

Staff Writer

ஆம் ஆத்மி கட்சியின் ஏழு எம்.பி.கள். பா.ஜ.க.வுக்குத் தாவியதற்கு குடியரசுத் துணைத் தலைவர் மாநிலங்களவைத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஆம் ஆத்மி கட்சியின் உடைவில், ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் அக்கட்சியைவிட்டு விலகினர். முதலில் மாநிலங்களவையில் அக்கட்சியின் துணைத்தலைவராக இருந்த இராகவ் சத்தா உட்பட மூவர் பா.ஜ.க.வில் சேர்ந்தனர். அவர்களை அடுத்து கிரிக்கெட் ஆட்டக்காரர் அர்பஜன் சிங் உட்பட நால்வரும் பா.ஜ.க.வில் இணைவதாக அறிவித்தனர்.

இதனிடையே, அவர்கள் ஏழு பேரையும் தகுதிநீக்கம் செய்யுமாறு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணனுக்கு ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் கடிதம் அனுப்பினார்.

ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்கள் கட்சி தாவினால் அது ஏற்கத்தக்கது எனும் நிலையில், இராதாகிருஷ்ணன் இன்று அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.